சென்னை: தமிழக அரசியலில் மு.க.ஸ்டாலின், டிடிவி தினகரன் போன்ற நிறைய சின்னத்தம்பிகள் இருக்கின்றனர். ஆனால், 2 சின்னத்தம்பிகளும் ஆட்சி அமைக்க முயற்சிப்பது நடக்காது என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கூட்டணி, தேர்தல் விவகாரத்தில் லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வருவது தான் அதிமுக. மக்களவைத் தேர்தல் பணிகள் அதி விரைவு வேகத்தில் நடைபெற்று வருகின்றன. பிற கட்சிகளுக்கு முன்னதாகவே மக்களவைத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனுவை பெறவுள்ளதும் அதிமுக தான் என்றார்.
மேலும், அரசியலில் மு.க.ஸ்டாலின், டிடிவி தினகரன் போன்ற நிறைய சின்னத்தம்பிகள் இருக்கின்றனர். அரசியலில் 2 சின்னத்தம்பிகளும் ஆட்சி அமைக்க முயற்சிப்பது நடக்காது. மு.க.ஸ்டாலினையும், டிடிவி தினகரனையும் சின்னத்தம்பி யானையுடன் ஒப்பிட்டுப் பேசிய ஜெயகுமார், கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர்கள் வானம் ஏறி வைகுண்டம் பார்த்தார்களாம். எடுப்பது பிச்சை ஏற நினைப்பது பல்லக்கு உள்ளிட்ட பழமொழிகளை கூறியும் விமர்சித்தவர், காய்த்த மரம் தான் கல்லடி படும் என்பது போல் அதிமுக மீது அனைவரும் குறைகூறுவது வாடிக்கையாகிவிட்டது. திமுக எப்போதும் இரட்டை குதிரையில் சவாரி செய்யும் என்றார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கே.எஸ்.அழகிரி என்னுடைய நண்பர்; பண்பாடு கருதி அவருக்கு எனது வாழ்த்துக்கள் என கூறினார் ஜெயகுமார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

970 கோல்கள்: கோப்பை இல்லையென கிண்டல் செய்தவர்களுக்கு சைகையில் பதிலளித்த ரொனால்டோ!

தனுஷ் - விக்னேஷ் ராஜா கூட்டணி வெல்லுமா? கர - திரை விமர்சனம்!

புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு!

யுபிஎஸ்சி: இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


