

புதுதில்லி: நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.
பாஜக மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாய், கடந்த 1996 (13 நாட்களும்), 1998-99 (13 மாதங்களும்) மற்றும் 1999-2004 ஆகிய ஆண்டுகளில் 3 முறை பிரதமராக பதவி வகித்தார். இவரது ஆட்சி காலங்களில் பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு அவை செயல்படுத்தப்பட்டன.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 16 ஆம் தேதி வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக அவர் காலமானார்.
இந்நிலையில், வாஜ்பாயை கவுரவிக்கும் விதமாக நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் அவரது உருவப்படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, மத்திய அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.