15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைதடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களால் இந்தியாவில் எஃப்டிஐ அதிகரிக்கும்: ஆசிய வளா்ச்சி வங்கிதானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்தும் முறை தொடக்கம்பிரதமா் மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது!இன்றுமுதல் வரும் மே 31 வரை 11 மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஇந்தியா - நெதா்லாந்து 17 ஒப்பந்தங்கள் கையொப்பம்கேரள முதல்வராக சதீசன் இன்று பதவியேற்பு: ராகுல், பிரியங்கா பங்கேற்புமே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்பு
/

அறக்கட்டளை-சங்கங்கள் மூலம் தனியார் பல்கலை.: பேரவையில் மசோதா தாக்கல்

அறக்கட்டளைகள், சங்கங்கள் ஆகியவற்றின் மூலமாக தனியார் பல்கலைக்கழகங்கள் தொடங்குவதற்கான புதிய சட்ட மசோதாவை பேரவையில் உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்

Updated On :14 பிப்ரவரி 2019, 1:38 am IST


அறக்கட்டளைகள், சங்கங்கள் ஆகியவற்றின் மூலமாக தனியார் பல்கலைக்கழகங்கள் தொடங்குவதற்கான புதிய சட்ட மசோதாவை பேரவையில் உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் புதன்கிழமை தாக்கல் செய்தார். இந்த மசோதாவுக்கு திமுக எதிர்ப்பு தெரிவித்தது.
 மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது:
மாணவர்களுக்கு உயர்கல்வியை வழங்கும் பொருட்டு, தமிழகத்தில் இரண்டு தனியார் பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்காக அண்மையில் சட்டங்கள் இயற்றப்பட்டன. மாணவர்களுக்கு உயர்கல்வி வழங்குவதில் அரசுக்குத் துணை நிற்கும் பொருட்டும், உலகத் தரம் வாய்ந்த கல்வியை அளிக்கும் பொருட்டும் மாநிலத்தில் தனியார் பல்கலைக்கழகங்களை நிறுவ முன்வருபவர்களுக்கு வசதி ஏற்படுத்தித் தர முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி,  தனியார் பல்கலைக்கழகங்களை நிறுவ முன்வரும் அமைப்புகளுக்கு அதாவது பொறுப்பு அறக்கட்டளைகள், சங்கங்கள், லாப நோக்கம் இல்லாமல் இயங்கும் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படும். இதற்கேற்ற வகையில், புதிய சட்டம் இயற்ற அரசு முடிவு செய்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.