காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

போராட்டத்தில் ஈடுபட்டு நடவடிக்கைக்கு உள்ளான 1100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் பணியிடை நீக்கம் ரத்து 

அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு நடவடிக்கைக்கு உள்ளான 1100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் பணியிடை நீக்கம் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

News image
Updated On :13 பிப்ரவரி 2019, 11:46 am

DIN

சென்னை: அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு நடவடிக்கைக்கு உள்ளான 1100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் பணியிடை நீக்கம் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய முறையை நடைமுறைப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ கடந்த மாதம் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டது.

இதன் காரணமாக 1500 க்கும் மேற்பட்ட ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. பின்னர் 1100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் மீது 86 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 6 ஆயிரத்து 512 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஆயிரத்து 656 பேர் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

மேலும், 4 ஆயிரத்து 871 பேர் நீதிமன்றங்கள் முன்பு ஆஜர்படுத்திய போது, நீதிமன்றங்களால் உடனடியாக ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். வேலை நிறுத்தம் கைவிடப்பட்டவுடன், நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்ட ஆயிரத்து 656 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு நடவடிக்கைக்கு உள்ளான 1100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் பணியிடை நீக்கம் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை தற்போது அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.