பி.எஸ்.என்.எல். நிறுவனம் மக்களுக்கு சேவை அளிக்க வேண்டுமென்ற நோக்கோடு, சேவை விரிவாக்கத்திற்காக தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் வாங்க மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளது. அந்த கோரிக்கையையும் மத்திய அரசாங்கம் நிராகரித்துவிட்டது. அதே சமயம் தனியார் நிறுவனங்களுக்கு இந்திய நாட்டு வங்கிகளிடமிருந்து ரூ. 8 லட்சம் கோடி அளவிற்கு கடன் கொடுத்துள்ள மோடி அரசு, பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு கடன் வழங்க மறுப்பது, பி.எஸ்.என்.எல். நிர்வாகத்தை முடமாக்கி, கார்ப்பரேட் நிறுவனங்களை வளர்க்கும் நோக்கமே தவிர வேறில்லை என்பது தெளிவு. மத்திய அரசின் நடவடிக்கைகள் மூலம் பலகோடி பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாக்கப்படுகின்றனர்.