

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்காக, நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் முன் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிப்.28 ஆம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த ஆணையத்தில் ஜெயலலிதா, சசிகலாவின் உறவினர்கள், முன்னாள் தலைமைச் செயலர்கள், காவல் துறை அதிகாரிகள், அரசு, அப்பல்லோ மருத்துவர்கள் என இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த விசாரணை தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.
இந்நிலையில், நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் முன் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிப்.28 ஆம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் பன்னீர்செல்வத்துக்கு பல முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகதது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக திங்களன்று ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் ஆயுட்காலம் மேலும் நான்கு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.