சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!
/

திருமயத்தில் வேன் - கண்டெய்னர் லாரி நேருக்கு நேர் மோதல்: ஏழு பேர் பலி 

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் வேனும் கண்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஏழு பேர் பலியாகினர். 

News image
Updated On :6 ஜனவரி 2019, 3:18 pm IST

திருமயம்: புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் வேனும் கண்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஏழு பேர் பலியாகினர்.  

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 15 பேர் வேன் ஒன்றில் தமிழகத்தில் உள்ள கோயில்களை தரிசனம் செய்ய வந்திருந்தனர்  அவர்கள் ஞாயிறன்று கோவில் தரிசனம் முடிந்து திரும்பிக்கொண்டிருந்த பொழுது, புதுக்கோட்டை மாவட்டம்  திருமயம் அருகே அவர்களது வேன் விபத்துக்குளானது. 

தவறான வழியில் வந்த கண்டெய்னர் லாரி ஒன்று அவர்களது வேன் மீது மோதியது. இந்த கோர விபத்தில் வேன் ஓட்டுநர் உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு திருமயம் அரசு மருத்துவனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

திருமயம் போலீசார் விபத்து குறித்து விசாரணைநடத்தி வருகின்றனர் .
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.