உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

பாஜகவுக்கு எதிராக தம்பிதுரை பேசுவது நாடகம்: டிடிவி தினகரன்

பாஜகவுக்கு எதிராக தம்பிதுரை பேசுவது நாடகம் என்று அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :23 ஜனவரி 2019, 11:28 am IST

பாஜகவுக்கு எதிராக தம்பிதுரை பேசுவது நாடகம் என்று அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

தமிழக மக்களுக்காக ஜெயலலிதா கண்ட கனவுகளை நிறைவேற்ற தினகரன் அதிமுவுடன் இணைய வேண்டும் என்றும் தினகரன் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை அதிமுகவோடு இணைந்து சந்திக்க வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே புதுச்சேரியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்தார். 

இதுகுறித்து திருச்சியில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் டிடிவி தினகரன் பதிலளித்தாவது,
அதிமுகவும், அமமுகவும் ஒன்றிணைய வேண்டும் என்பது ராம்தாஸ் அத்வாலேவின் தனிப்பட்ட விருப்பம். துரோக சக்தியான அதிமுகவோடு, அமமுக ஒன்றிணைய வாய்ப்பில்லை. 

ஆட்சி அதிகாரம் அதிமுகவிடம் இருப்பதால் நாங்கள் அவர்களோடு சேர்ந்துவிடமாட்டோம். அமமுகவில் ஒவ்வொரு மாவட்டத்திற்கு, நிர்வாகிகளே 3 ஆயிரம் பேர் இருக்கிறார்கள். பாஜகவுக்கு எதிராக தம்பிதுரை பேசுவது நாடகம், முதல்வர் பழனிசாமி சொல்லிதான் அவர் பேசி வருகிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.