மக்களவைத் தேர்தலில் முன்கூட்டியே பிரதமர் வேட்பாளரை அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்தார்.
மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த மூலக்கரையில், மறைந்த முன்னாள் மாவட்டச் செயலாளர் ஜோதிராம் படத்திறப்பு விழா, அவரது குடும்பத்திற்கு நிதி உதவி அளிக்கும் விழா மற்றும் முன்னாள் விடுதலை போராட்ட வீரர் சுர்ஜித்பவன் நிதி உதவி வழங்கும் விழா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்டச் செயலர் இரா.விஜயராஜன் தலைமை வகித்தார். புறநகர் மாவட்டச் செயலர் சி.ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இதில் சீதாராம் யெச்சூரி பங்கேற்று ஜோதிராம் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கினார்.
பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
பெண் குழந்தைகள் மேம்பாட்டு நிதி திட்டத்தில் இருந்து 56 சதவீதம் மோடியின் விளம்பரத்திற்கு பயன்படுத்தப்பட்டு உள்ளது. நாட்டில் வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகள் தற்கொலை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் இருக்கிறபோது, மதத்தின் பெயரால் பாஜகவினர் நாட்டில் பிரிவினையை ஏற்படுத்துகின்றனர்.
மத்தியில் பாஜக ஆட்சியையும், மாநிலத்தில் அதிமுக ஆட்சியையும் அகற்ற வேண்டும். இந்திய ஜனநாயக முறைப்படி தேர்தலுக்கு பின்புதான் பிரதமர் தேர்வு செய்யப்படுவார். மக்களவை தேர்தலின் போதே பிரதமர் வேட்பாளரை அறிவிக்க வேண்டிய அவசியம் கிடையாது. கடந்த காலங்களில் வாஜ்பாய், மன்மோகன்சிங் உள்ளிட்டோர் தேர்தலுக்கு பின்பே பிரதமர்களாக அறிவிக்கப்பட்டனர்.
பிரதமர் வேட்பாளர் என்ற தவறான முன்னுதாரணத்தை பாஜக கொண்டு வருகிறது. முன்னேறிய ஜாதிகளுக்கு 10 சதவீத சிறப்பு இட ஒதுக்கீடுத் திட்டம் என்பது எந்தவித கணக்கெடுப்பும் நடத்தப்படாமல், அவசர கதியில் கொண்டு வரப்பட்டுள்ளது.
இட ஒதுக்கீடு குறித்து மக்களவையில் விவாதம் வந்தபோது அனைத்து ஜாதியினருக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை வைத்தோம். எனவே எந்தவித கணக்கெடுப்பும் இல்லாமல் இட ஒதுக்கீடு செய்வது சரியாக இருக்காது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆபரேஷன் சிந்தூரின்போது இந்திய கடற்படையால் பாகிஸ்தானுக்கு கடும் அழுத்தம்: ராஜ்நாத் சிங்

ஆப்கானிஸ்தான் அகதிகளை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து 22 போ் உயிரிழப்பு

42 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்ற அஞ்சல்காரருக்கு பிரிவு உபசார விழா

மும்மொழித் திணிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



