அதிமுக என்பது துரோகக் கட்சியாகிவிட்டது. அதிலிருந்து விலகி வெகுதொலைவு வந்துவிட்டோம். இனி, அதில் இணையும் எண்ணமில்லை என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் துணைப் பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.
கரூரில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில், இக்கட்சியின் மாவட்ட புதிய அலுவலகத்தை திறந்து வைத்த பின்னர், செய்தியாளர்களிடம் மேலும் அவர் கூறியது:
அதிமுகவிலிருந்து விலகி வெகு தொலைவு வந்துவிட்டோம். இனி அதிமுகவில் சேருவதற்கு 0.1 சதவிகிதம் கூட வாய்ப்பில்லை. கருணாநிதி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திருவாரூர் தொகுதி இடைத் தேர்தலை ஒத்திவைக்க திமுக-வே துணைபோயுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரையும் பாஜக-வுக்கு எதிராக பேசுவதை போன்று நாடகமாடுகின்றனர். கொடநாடு விவகாரத்தில் முதல்வர் பயப்படுவதாலேயே எங்களுக்கு சந்தேகம் ஏற்படுகிறது. இந்த விவகாரத்தில் தவறு யார் செய்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். அரவக்குறிச்சி இடைத்தேர்தல் உள்ளிட்ட எல்லா தேர்தலிலும் அமமுக வெற்றி பெறும். அதிமுக மூழ்கும் கப்பலாகிவிட்டது. அமமுக-விலிருந்து ஒரு சிலர் விலகிச் செல்வதால் பாதிப்பு இல்லை என்றார் தினகரன்.
அலுவலகத் திறப்பு விழாவுக்கு கரூர் மாவட்ட அமமுக செயலர் தங்கவேல் தலைமை வகித்தார். மாநில, மாவட்ட நிர்வாகிகள் விழாவில் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐபிஎல் தொடரில் அதிவேகமாக 1000 ரன்களைக் கடந்து வைபவ் சூர்யவன்ஷி சாதனை!

திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் மயக்கம்: தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் கண்டனம்

கட்டா குஸ்தி - 2 மேக்கிங் விடியோ!

தனியார் பள்ளியில் பயங்கர தீவிபத்து! | Bengaluru
விடியோக்கள்

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India

சூர்யவன்ஷியையும் ஆர்ச்சரையும் மட்டும் நம்புனா...: கில்லி போல் ஆடிய கில்!
Jailer -2 படத்தில் Hrithik Roshan சிறப்புத் தோற்றம்? | Cinema updates |



