சென்னை: தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனம் நாளை முதல் துவங்க உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
ஊதிய உயர்வு மற்றும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கமான ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கடந்த 22-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் பணிக்கு திரும்பாவிட்டால், அவர்களின் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு, பயிற்சி ஆசிரியர்கள் அவ்விடங்களில் நியமிக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு ஏற்கனவே எச்சரித்தது.
அதேசமயம் காலக்கெடுவுக்கு பின்னர் பணிக்கு வரும் ஆசிரியர்கள், ஏற்கெனவே பணியாற்றிய இடங்களிலேயே மீண்டும் பணியாற்றுவதற்கான உத்தரவாதம் வழங்க முடியாது என்றும், குறிப்பிட்ட வருவாய் மாவட்டத்தில் அவர்கள் எங்கு வேண்டுமானாலும் பணிக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் தமிழக அரசு கூறியிருந்தது.
இதனிடையே, தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாகக்கூறி, சென்னையில் 12 ஆசிரியர்களும், காஞ்சிபுரத்தில் 11 ஆசிரியர்களும், திருவள்ளூரில் 5 ஆசிரியர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனம் நாளை முதல் துவங்க உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
ஆசிரியர்கள் நாளை காலை 9 மணிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும். அவர்கள் திரும்பவிட்டால் அவர்களது இடத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நாளை முதல் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரு நடைமேடை வியாபாரிகள் பலி! காய்கறி விற்பவர்கள் வளாகத்தைத் தொடக் கூடாது: கார்கே

மதுரை வந்தடைந்த கள்ளழகர்! பக்தர்கள் உற்சாக வரவேற்பு!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? பிஎஸ்என்எல் நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

பூந்தொட்டியில் மறைந்திருந்த பாம்பு! பத்திரமாக மீட்பு! | CBE
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

