மின்ட் மணிக்கூண்டு ஒரு நாளில் 2 முறை மட்டும் சரியான நேரத்தைக் காட்டும் மர்மம் என்ன? 

1950களில் கைக்கடிகாரம் என்பது விலையுயர்ந்த பொருளாக இருந்தது. சிலரால் மட்டுமே வாங்கிப் பயன்படுத்தக் கூடிய பொருட்களில் ஒன்றாகவும் இருந்தது.
மின்ட் மணிக்கூண்டு ஒரு நாளில் 2 முறை மட்டும் சரியான நேரத்தைக் காட்டும் மர்மம் என்ன? 


சென்னை: 1950களில் கைக்கடிகாரம் என்பது விலையுயர்ந்த பொருளாக இருந்தது. சிலரால் மட்டுமே வாங்கிப் பயன்படுத்தக் கூடிய பொருட்களில் ஒன்றாகவும் இருந்தது.

அப்போது, பொதுமக்களின் பயன்பாட்டுக்காக நகரின் முக்கியப் பகுதிகளில் அமைக்கப்பட்டதுதான் மணிக்கூண்டுகள். ஆனால், தற்போதைய வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பத்தில் கைக்கடிகாரமே மறைந்து போய்விட்டது. பிறகு இந்த மணிக்கூண்டுகளுக்கு மட்டும் மவுசுக் கூடவாப் போகிறது. குறைந்துதான் போனது.

இதனாலேயே நகரில் உள்ள மணிக்கூண்டுகள் பயன்பாடற்ற கட்டடமாக மாறி நிற்கிறது. 

சென்னையில் மட்டும் 4 மணிக்கூண்டுகள் உள்ளன. ராயப்பேட்டை, டெமெல்லௌஸ் சாலை, டௌட்டன் மற்றும் மின்ட் சாலை.

மின்ட் சாலையில் இருக்கும் மணிக்கூண்டைத் தவிர பிற 3 மணிக்கூண்டுகளிலும் இருக்கும் கடிகாரங்கள் இயங்குகின்றன. ஆனால் மின்ட் சாலையில் இருக்கும் கடிகாரம் கடந்த 2018ம் ஆண்டு முதல் இயங்காமல் 5.20 என்ற மணியில் நிற்கிறது.

டௌட்டனில் இருந்த கடிகாரம் கடந்த 3 ஆண்டுகளாக செயல்படாமல் இருந்த நிலைடியில் 6 மாதங்களுக்கு முன்புதான் சரி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது..

இது குறித்து கார்ப்பரேஷன் அதிகாரி கூறுகையில், மின்ட் சாலையில் இருக்கும் கடிகாரம், மிகக் கனமான பெண்டுலத்தைக் கொண்டிருக்கும். இரும்புத் தட்டுக்கள், 4 அடி முட்கள், மெட்டல் கயிறுகளால் அமைக்கப்பட்டது இந்த கடிகாரம். இதனை 30 மணி நேரத்துக்கு ஒரு முறை ஸ்பேனர் பயன்படுத்தி ஊழியர் ஒருவர் கீ கொடுக்க வேண்டும். அப்போதுதான் இயங்கும் என்று தெரிவித்துள்ளார்.

அப்போதெல்லாம் ஒரு சிலர்தான் எச்எம்டி வாட்ச் வைத்திருப்பார்கள். பொது மக்கள் நேரத்தை அறிந்து கொள்ள இந்த மணிக்கூண்டு உருவாக்கப்பட்டது என்கிறார் வரலாற்று அறிஞர் வி. ஸ்ரீராம். 

மின்ட் சாலையில் உள்ள இந்த மணிக்கூண்டு 1948ம் ஆண்டு மேயர் கிருஷ்ணா ராவால் துவக்கி வைக்கப்பட்டது. இந்த கடிகாரம் மாஸ்டர் மற்றும் ஸ்லேவ் முறையில் இயங்கும். அதாவது, கீழிருந்து மாஸ்டர் ஒருவர் கீ கொடுத்தால், அடிமைகளைப் போல மேலிருக்கும் கடிகாரம் இயங்கும் என்பதே தொழில்நுட்பத்தின் முறை. 

இறுதியாக, மின்ட் சாலையில் இருக்கும் கடிகாரத்துக்கு என்னதான் வழி என்று கார்ப்பரேஷன் அதிகாரியிடம் கேட்டதற்கு, கடிகாரத்தை சரி செய்வதற்கான ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. ஜூலை இறுதிக்குள் ரூ.69 ஆயிரம் செலவில் இது சரிசெய்யப்படும் என்று தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com