சாதாரண அமைப்புகள் முதல் சட்டப்பேரவை வரை ஆதிக்கம் செலுத்தும் சாதி: உயர் நீதிமன்றம் கருத்து
சாதாரண அமைப்புகள் முதல் சட்டப்பேரவை வரை சாதி ஆதிக்கம் செலுத்துவதாக உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.


சென்னை: சாதாரண அமைப்புகள் முதல் சட்டப்பேரவை வரை சாதி ஆதிக்கம் செலுத்துவதாக உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒருமாதம் காலத்தில் சாதி ஆணவக் கொலைகள் நடைபெறுவது அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக பத்திரிக்கைகளில் வெளிவரும் செய்திகளில் அடிப்படையில் சென்னைஉயர் நீதிமன்றம் செவ்வாயன்று தானாக முன்வந்து வழக்கு தொடுத்துள்ளது. அந்த வழக்கின் விசாரணையில் நீதிபதி கூறியதாவது:
தமிழகத்தில் சாதாரண அமைப்புகள் முதல் சட்டப்பேரவை வரை சாதி தான் ஆதிக்கம் செலுத்துகிறது
அதிலும் குறிப்பாக ஆணவப்படுகொலையை தடுக்க வேண்டும் என கூறும் கட்சிகள் தான் சாதியையும் ஊக்குவிக்கின்றன
எனவே ஆணவப்படுகொலைகளை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விரிவாக அறிக்கையளிக்க வேண்டும் என்று மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிடு வதாக தெரிவித்த நீதிபதி, வழக்கினை வரும் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...