மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

எம்பியாக பதவியேற்ற வைகோவிற்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து

மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுக்கொண்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

News image
Updated On :25 ஜூலை 2019, 8:46 am

மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுக்கொண்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட அ.தி.மு.க. மற்றும் திமுக எம்பிகள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். அதன்படி, தி.மு.க. சார்பில் தேர்வான மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பதவியேற்றுக் கொண்டார். மேலும் திமுக சார்பில் சண்முகம் மற்றும் வில்சன் ஆகியோரும் இன்று பதவியேற்றனர்.

'இந்திய இறையாண்மையை பற்றி நிற்பேன்' என தமிழில் உறுதிமொழி கூறி மாநிலங்களவை எம்.பி.யாக வைகோ பதவியேற்றுக்கொண்டார். இவர்களுக்கு துணை குடியரசுத்தலைவர் வெங்கய்ய நாயுடு பதவி பிரமாணம் செய்து வைத்தார். 

இந்நிலையில் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுக்கொண்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து கூறி கவிதை எழுதியுள்ளார். 
இதுகுறித்து கவிஞர் வைரமுத்து தனது டிவிட்டரில்,
வாழ்த்துக்கள் வைகோ...

சிறுத்தைபோல் நடந்து சென்றாய்
செம்மொழி உறுதி பூண்டாய்
நிறுத்தவே முடியவில்லை
நீள்விழி வடித்த கண்ணீர்

போர்த்திறம் பழக்கு - விட்டுப்
போகட்டும் வழக்கு - உன்
வார்த்தைகள் முழக்கு - நீ
வடக்கிலே கிழக்கு  
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.