மத்திய அமைச்சரவையில் சேருகிறதா தி.மு.க.?: பத்திரிக்கைச் செய்திக்கு டி.ஆர்.பாலு பதில்
மத்திய அமைச்சரவையில் தி.மு.க.சேருகிறது என்று ஒரு பத்திரிகையில் வெளியான செய்திக்கு, அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு பதிலளித்துள்ளார்.


சென்னை: மத்திய அமைச்சரவையில் தி.மு.க.சேருகிறது என்று ஒரு பத்திரிகையில் வெளியான செய்திக்கு, அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு பதிலளித்துள்ளார்.
இதுதொடர்பாக ஞாயிறன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையியல் கூறப்பட்டுள்ளதாவது:
நாடாளுமன்றம் ஒவ்வொரு முறையும் கூடுவதற்கு முன்னால் நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு பொறுப்பேற்றுள்ள அமைச்சர்கள் எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்தித்து பாராளுமன்ற கூட்டத்தொடர் சுமுகமாக நடைபெற ஆதரவு கேட்பது வழக்கமான ஒன்று
அந்த நடைமுறைப் பழக்கப்படி பாராளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் திரு.பிரகலாத் ஜோஷி அவர்களும் இணை அமைச்சர் திரு.அர்ஜீன்ராம் அவர்களும் என்னுடன் கலந்து பேசியதும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டதும் உண்மைச் செய்திகள்.
அவர்கள் என்னிடம் பேசிய போது நாடாளுமன்ற நடவடிக்கைகள் எந்தெந்த தேதிகளில் எத்தகைய நிகழ்வுகள் அரசாங்கம் மேற்கொள்ளவிருக்கிறது என்பதை தெறியப்படுத்தினர்
ஆனால் ஆறு மாதம் கழித்து திமுக உறுப்பினர்கள் பாஜக மத்திய அமைச்சரசையில் இடம் பெறுவார்கள் என்ற தினமலர் (09-06-2019) நாளேட்டின் யூகச்செய்தி கடைந்து எடுத்த கலப்படமற்ற பொய்
திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களும் - அவரின் அடியொற்றி பயணிக்கின்ற உண்மை தொண்டர்களும் வெளிப்படையானவர்கள் மட்டுமல்ல; ஓளிவு மறைவற்ற, நேர்மையான ஜனநாயகத்தின் ஊற்று கண்கள் என்பவற்றை வரலாறு அறியும். இதில் ஜனநாயக குருடர்களுக்கு வேலை இல்லை.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...