சென்னை சென்ட்ரல், எழும்பூர், மாம்பலம், தாம்பரம் உள்பட முக்கிய ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்களில் டிக்கெட் முன்பதிவு செய்ய மக்கள் காத்திருந்தனர். காலை 8 மணிக்கு டிக்கெட் முன்பதிவு தொடங்கி, ஒரு நிமிடம் முதல் 5 நிமிடங்களில் டிக்கெட் முன்பதிவு முடிந்தது. பாண்டியன், நெல்லை, பொதிகை, சேரன், மலைக்கோட்டை, முத்துநகர், நீலகிரி, கன்னியாகுமரி ஆகிய விரைவு ரயில்களில் அடுத்தடுத்த சில நிமிடங்களில் டிக்கெட் முன்பதிவு முடிந்து காத்திருப்போர் பட்டியல் காட்டியது. டிக்கெட் முன்பதிவு மையங்களில் ஒவ்வொரு வரிசையிலும் சராசரி 3 முதல் 5 நபர்களுக்கு முன்பதிவு டிக்கெட் கிடைத்தது.