தமிழகத்தின் முழு நேர ஆளுநராக ஆர்.வி. அர்லேகர் நியமனம்!தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம் இந்திய வரலாற்றில் இடம்பெறும்: வி.டி. சதீசன்இந்தியா கூட்டணி போராட்டத்தில் திமுக ஏன் பங்கேற்க வேண்டும்? காங்கிரஸுக்கு திமுக கேள்விஅரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருள்களின் விலை உயர்வு உருவாக்கப்பட்ட பிம்பமா? - டிடிவி தினகரன்99 தேர்தல்களில் தோற்ற பிறகு... தோல்விக்கு காரணம் தேடுகிறார் ராகுல்! அனுராக் தாக்குர்அனுமதி கோரிய 30 நிமிடத்தில் ஜந்தர் மந்தர் போராடுவதற்கான இடமில்லை என அறிவிப்பு! - சிஜேபிபிரதமரின் பிரச்னை போராட்டக் களம் அல்ல, போராடும் மனம்; ஜனநாயகமும் நீக்கப்படும் - அபிஜீத் தீப்கேஉச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணி!

பொள்ளாச்சி பாலியல் விவகாரம்: அதிமுக பிரமுகர் கட்சியில் இருந்து நீக்கம் 

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் தொடர்புடைய அதிமுக பிரமுகர் ஒருவரை அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கி அதிமுக தலைமையைகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது 

Published On :

சென்னை: பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் தொடர்புடைய அதிமுக பிரமுகர் ஒருவரை அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கி அதிமுக தலைமையைகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது 

பொள்ளாச்சி பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் குடும்ப பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுடன், பேஸ்புக் மூலம்  பேசி, பழகி, ஆபாச படம் எடுத்து மிரட்டியதாக திருநாவுக்கரசு என்னும் வாலிபன் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இவர்களில் சதீஷ், சபரிராஜன், வசந்த்குமார்  உட்பட 7 பேர் முதலில் கைது செய்யப்பட்டனர். பின்னர் தேடப்பட்டு வந்த முக்கியக் குற்றவாளி திருநாவுக்கரசு கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த் வழக்கில் ஆளும் அதிமுக கட்சியைச் சேர்ந்த பிரமுகர்கள் சிலருக்கு தொடர்பிருப்பதாக தகவல்கள் வெளியானது. 

முன்னதாக  கடந்த மாதம் 12ஆம் தேதி கல்லூரி மாணவியை காரில் அழைத்துச் சென்று ஆபாச விடியோ எடுத்து அத்துமீற முயன்றதாக சபரி (எ) ரிஷ்வந்த் உள்பட மூன்று பேர் பொள்ளாச்சி கிழக்கு போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். புகார் கொடுத்த மாணவியின் சகோதரைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக சபரி (எ) ரிஷ்வந்த்தின் நண்பர்கள் மூவரும் கைது செய்யப்பட்ட போதுதான், இவர்கள் இதுபோன்று ஏராளமான பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்தது தெரிய வந்தது. இந்த சம்பவம் கோவை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் தொடர்புடைய அதிமுக பிரமுகர் 'பொள்ளாச்சி' நாகராஜ் அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கி அதிமுக தலைமையகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் இபிஎஸ் - ஓபிஎஸ் இருவரது பெயரிலும் வெளியான அறிக்கையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறிச் செயல்பட்டதால், பொள்ளாச்சி நாகராஜ் கட்சியின் அடிப்படைஉறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.