சென்னை: மதுவால் ஏற்படும் சாவுகளுக்கு ஏன் தமிழக அரசை பொறுப்பாக்கக் கூடாது? என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கோவையில் மதுபோதையில் உண்டான தகராறில் இரண்டு பேர் தற்கொலை செய்து கொள்வதற்கு காரணமாக அமைந்ததாக வீராசாமி என்பவர் கைது செய்யப்பட்டார். ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்திருந்த மனுவானது சென்னைஉயர் நீதிமன்றத்தில் புதனன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
இத்தகைய சாவுகள் மிகுந்த வருத்தமளிக்கிறது. தமிழக அரசுதான் மது விற்பனையில் ஈடுபடுகிறது என்பதால், மதுவால் ஏற்படும் சாவுகளுக்கு ஏன் தமிழக அரசை பொறுப்பாக்கக் கூடாது?
தமிழக அரசுக்கு மது விற்பனையின் மூலம் மாதத்திற்கு 21 கோடி ரூபாய் வருமானம் வருகிறது என்று தெரிவிப்பது வருத்தத்திற்குரிய விஷயம்.
தமிழக இளைஞர்களில் குறிப்பிடத்தக்க சதவீதத்தினர் மது போதைக்கு அடிமையாகி உள்ளனர்.
இவ்வாறு தெரிவித்த நீதிபதிகள் ஏப்ரல் 4 - ஆம் தேதிக்குள் இந்த வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவித்து வழக்கினை ஒத்திவைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரு நடைமேடை வியாபாரிகள் பலி! காய்கறி விற்பவர்கள் வளாகத்தைத் தொடக் கூடாது: கார்கே

மதுரை வந்தடைந்த கள்ளழகர்! பக்தர்கள் உற்சாக வரவேற்பு!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? பிஎஸ்என்எல் நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

பூந்தொட்டியில் மறைந்திருந்த பாம்பு! பத்திரமாக மீட்பு! | CBE
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


