பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

தமிழகத்தில் கடும் வெப்பத்துடன் வீசப்போகும் அனல் காற்று:  வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! 

தமிழகத்தில் கடும் வெப்பத்துடன் அனல் காற்று வீச வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது

News image
Updated On :5 மே 2019, 12:30 pm

DIN

சென்னை: தமிழகத்தில் கடும் வெப்பத்துடன் அனல் காற்று வீச வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்த நிலையில் ‘அக்னி நட்சத்திரம்’ என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் காலம் தமிழகத்தில் வெள்ளியன்று துவங்கியது.

கத்திரி வெயில் காலத்தின் முதல் நாளான சனிக்கிழமையன்று வெயில் அவ்வளவாக இல்லாவிட்டாலும், நல்ல  அனல் காற்று வீசியது.  இரண்டாவது நாளான ஞாயிறன்று அக்கினி நட்சத்திர வெயில் காலையில் இருந்தே மிகவும் கடுமையாக இருந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் கடும் வெப்பத்துடன் அனல் காற்று வீச வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்தில் கடும் வெப்பத்துடன் அனல் காற்று வீச வாய்ப்பு உள்ளது.  வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யவும்  வாய்ப்பு உள்ளது.

சென்னையில் 100 டிகிரி வரை வெப்பநிலை காணப்படும்.

சென்னையை பொறுத்தவரை வானம் சிறிது மேகமூட்டத்துடன் காணப்படும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.