மேற்கண்ட கிணறுகள் அனைத்தும் தமிழ்நாட்டில் உள்ள நாகப்பட்டினம், விழுப்புரம், கடலூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியில் உள்ள காரைக்கால், புதுச்சேரி ஆகிய மாவட்டங்களிலும் ஒதுக்கப்பட்டு - சுமார் 19 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் நிறைவேற்றுவதாக வேதாந்தா மற்றும் ஓ.என்.ஜி.சி. நிறுவனங்கள் ஒப்புக்கொண்டன. தமிழக விவாசாயிகளின் கருத்துக்களை முன்கூட்டியே கேட்காமல் அலட்சியப்படுத்திவிட்டு, வேளாண்மைக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஆபத்தை உருவாக்கும் இந்தத் திட்டங்களுக்கு மத்திய பா.ஜ.க. அரசு கொடுத்த அனுமதியை அனைத்து தரப்பு மக்களும் எதிர்த்தனர். ஆனால், இந்த அழிவுத் திட்டங்களை எதிர்க்கத் துளியும் துணிச்சல் இல்லாத “எடுபிடி அ.தி.மு.க அரசு” தொடர்ந்து தமிழக விவசாயிகளை திட்டமிட்டு வஞ்சித்து வதைத்து வருகிறது.