சேலம்: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்வதில் உறுதியாக உள்ளோம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி வேலூர் சிறையில் கடந்த 27 ஆண்டுகளுக்கு மேலாக ஆயுள் தண்டனை கைதியாக இருந்து வரும் 7 பேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் 9-ஆம் தேதியன்று முடிவு செய்து தமிழக ஆளுநருக்கு பரிந்துரை செய்தது.
ஆனால் பரிந்துரைக்கப்பட்டு 6 மாத காலத்துக்கு மேலாகியும் ஆளுநர் அந்தப் பரிந்துரை மீது இதுவரை எந்த முடிவும் எடுக்காமல் உள்ளார்.
இந்நிலையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்வதில் உறுதியாக உள்ளோம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திங்களன்று சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் இதுதொடர்பாக கேட்கப்பட்ட போது கூறியதாவது:
இந்த விவகாரத்தில் பொதுமக்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்பவே அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றயது. அந்த ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றுதான் நாங்கள் விரும்புகிறோம். அதற்காகவே தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளோம். இதில் ஆளுநர்தான் முடிவெடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கைரேகை, கருவிழி ஒற்றுமையுடன் தேனி இரட்டையர்கள்! ஆதார் புதுப்பிக்க என்னதான் வழி?

ஜேடன் லெனாக்ஸ் 5 விக்கெட்டுகள்: தொடரை சமன்படுத்தியது நியூசிலாந்து!

துயருற்ற தாயின் குரல்! பிரதமர் மோடிக்கு கேத்தனின் தாய் கடிதம்!

அமலாக்கத் துறைக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்றார் ஐசரி கணேஷ்!
விடியோக்கள்

வியத்நாம் படகு விபத்தில் தப்பித்தது எப்படி? உயிர்தப்பிய நிர்மல் குமார் பேட்டி | Vietnam boat tragedy

மணமாலை வரம் தரும் முருகன் | Kalyana Kandha swamy Kovil | Madipakkam | கல்யாண கந்தசுவாமி கோயில்| கோயில் வலம் -3

தவெகவில் இணைய என்னை யாரும் அழைக்கவில்லை! - எம்.ஆர். விஜயபாஸ்கர் விளக்கம் | TVK | ADMK



