/

ஜேடன் லெனாக்ஸ் 5 விக்கெட்டுகள்: தொடரை சமன்படுத்தியது நியூசிலாந்து!

நியூசிலாந்து - மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் மோதிய இரண்டாவது ஒருநாள் போட்டி குறித்து...

News image

விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் நியூசிலாந்து வீரர் ஜேடன் லெனாக்ஸ். - படம்: எக்ஸ் / ப்ளாக்கேப்ஸ்

Updated On :14 ஜூலை 2026, 2:29 pm IST

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மேற்கிந்தியத் தீவுகள் நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள நியூசிலாந்து அணி 5 போட்டிகள் ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.

முதல் ஒருநாள் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வென்றது. இரண்டாவது போட்டி நேற்று மாலை கயானாவில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த மே.இ. தீவுகள் அணி 36 ஓவர்களில் 138 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக ஜாம் கேம்பெல் 43 ரன்கள் எடுத்தார்.

பந்துவீச்சில் அசத்திய நியூசிலாந்து அணியின் சார்பில் இடதுகை சுழல்பந்துவீச்சாளர் ஜேடன் லெனாக்ஸ் 5 விக்கெட்டுகளை எடுத்து மிரட்டினார். 8 ஓவர்கள் வீசிய இவர் 19 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

அடுத்து விளையாடிய நியூசிலாந்து அணி 32.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்து வென்றது. அதிகபட்சமாக டாம் லாதம் 37 ரன்கள் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி ஒருநாள் தொடரை 1-1 என சமன்படுத்தியுள்ளது.

இந்தப் போட்டியில் ஆட்ட நாயகனாக ஜேடன் லெனாக்ஸ் தேர்வு செய்யப்பட்டார். மூன்றாவது ஒருநாள் போட்டி ஜூலை 17ஆம் நாள் தொடங்கவிருக்கிறது.

Summary

New Zealand beats West Indies by 5 wickets in the 2nd ODI to level the series 1-1

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.