புதுவையில் அடுத்த பேரவைத் தலைவர் பதவியைப் பிடிக்க காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
புதுவை காமராஜர் நகர் பேரவைத் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்ட வெ.வைத்திலிங்கம், பேரவைத் தலைவராக பதவி வகித்து வந்தார். மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பேரவைத் தலைவர் பதவியை அவர் ராஜிநாமா செய்தார். இதையடுத்து, பேரவைத் தலைவர் பொறுப்பை, பேரவைத் துணைத் தலைவர் வே.பொ.சிவக்கொழுந்து வகித்து வருகிறார்.
இந்த நிலையில், தற்போது புதிய பேரவைத் தலைவரை தேர்வு செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது. மேலும், தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் திமுக வேட்பாளர் கே.வெங்கடேசன் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு பதவியேற்பு விழா நடத்த வேண்டியுள்ளது. இதனிடையே, பேரவைத் தலைவர் பதவியை குறி வைத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிலர் காய் நகர்த்தத் தொடங்கியுள்ளனர்.
தற்போது பேரவைத் தலைவர் பொறுப்பை வகித்து வரும் சிவக்கொழுந்துக்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகக் கூறப்படுகிறது. எனினும், சில எம்.எல்.ஏ.க்களும் இந்தப் பதவிக்கு ஆசைப்படுவதால் யாரை பேரவைத் தலைவராக நிறுத்தலாம் என புதுவை காங்கிரஸ் கட்சித் தலைமை யோசித்து வருகிறது. பேரவைத் தலைவராக சிவக்கொழுந்து பொறுப்பேற்றால் துணைத் தலைவர் பதவி காலியாகும். அந்தப் பதவியை யாருக்கு வழங்கலாம் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
பேரவைத் தலைவர் வாய்ப்பு யாருக்கு என்பது குறித்து முடிவு செய்ய இன்னும் ஒரு வாரம் ஆகலாம் என ஆளும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









