சென்னை: சென்னையில் தனியார் குடிநீர் லாரி உரிமையாளர்கள் நடத்த உத்தேசித்திருந்த வேலைநிறுத்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் நிலத்தடி நீரை எடுப்பதற்கு சென்னை உயர் நீதி மன்றம் தடை விதித்துள்ளது. இந்த தடையை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் திங்கள் (27-ந்தேதி) முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக முன்னரே அறிவித்தனர்.
ஏற்கனவே சென்னையில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில், தனியார் தண்ணீர் லாரிகளின் இந்த வேலை நிறுத்த போராட்ட அறிவிப்பினால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தண்ணீர் பிரச்சினையை அதிகரித்து விடும் சூழ்நிலை உருவானது.
இந்நிலையில் சென்னையில் தனியார் குடிநீர் லாரி உரிமையாளர்கள் நடத்த உத்தேசித்திருந்த வேலைநிறுத்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டம் தொடர்பாக நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகள் தண்ணீர் லாரி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து வேலைநிறுத்தம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக லாரி உரிமையாளர்கள் தற்போது அறிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!

பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோயிலில் நரசிம்ம ஜெயந்தி சிறப்பு வழிபாடு!

ஓடிடியில் வெளியாகிறது மூன்றாம் பிறை!

பொதுத்துறை வங்கியில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


