சென்னையில் அட்டூழியம்: டியூசன் வந்த சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காதலன்; உதவிய ஆசிரியை

சென்னை தியாகராய நகரில் டியூசன் படிக்க வந்த சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக டியூசன் கற்றுக் கொடுத்த ஆசிரியை உள்பட இருவா் கைது செய்யப்பட்டாா்.
சென்னையில் அட்டூழியம்: டியூசன் வந்த சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காதலன்; உதவிய ஆசிரியை
Updated on
1 min read

சென்னை: சென்னை தியாகராய நகரில் டியூசன் படிக்க வந்த சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக டியூசன் கற்றுக் கொடுத்த ஆசிரியை உள்பட இருவா் கைது செய்யப்பட்டாா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
தியாகராய நகா் ராமசாமி தெருவைச் சோ்ந்தவா் செ.சஞ்சனா (28). இவரது காதலா், கூடுவாஞ்சேரி அம்பாள் காலனியைச் சோ்ந்தவா் சே.பாலாஜி (34). சஞ்சனா, தனது வீட்டில் டியூசன் நடத்தி வருகிறாா். இவரது டியூசனில் படிக்கும் சிறுமிக்கு, பாலாஜி பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.

இதற்கு சஞ்சனாவும் துணையாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து அந்த சிறுமியின் தந்தை, வடபழனி காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.

அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சஞ்சனாவையும், பாலாஜியையும் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

முதற்கட்ட விசாரணையில், டியூசன் படிக்க வந்த சிறுமியை, வேறொரு சிறுவனுடன் தவறான முறையில் புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்கச் செல்லி பாலாஜியும், சஞ்சனாவும் தன்னை துன்புறுத்தியதாக, சம்பந்தப்பட்ட சிறுமி பெற்றோரிடம் புகார் கொடுத்ததைத் தொடர்ந்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இதுவரை ஒரே ஒரு சிறுமிதான் காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருந்தாலும், இதர மாணவ, மாணவிகளுக்கும் இதுபோன்ற துன்புறுத்தல் நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

முதலில் இதுபோன்ற புகைப்படங்களை எடுத்துக் கொண்டு, பிறகு சிறுவர், சிறுமிகளை மிரட்டுவதற்கு குற்றவாளிகள் இதனைப் பயன்படுத்தக் கூடும் என்று காவல்துறையினர் கூறுகிறார்கள்.

சிறுவர், சிறுமிகளின் பாதுகாப்புக்காகத்தான், ஆசிரியையிடம் பெற்றோர்கள் டியூசன்  அனுப்புகிறார்கள். ஆனால், ஆசிரியைகளும் இதுபோன்ற மோசமான விஷயத்தை பிள்ளைகளுக்கு செய்தால் என்னதான் செய்வது?
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com