அரிசி ராஜாவைப் பிடிக்கும் முயற்சியில் பின்னடைவு

பொள்ளாச்சியில் இருக்கும் ரேஷன் கடைகள் மற்றும் வீடுகளுக்குள் புகுந்து அரிசியை விரும்பி சாப்பிடுவது இந்த யானையின் வழக்கம். 
அரிசி ராஜாவைப் பிடிக்கும் முயற்சியில் பின்னடைவு

கோவை, திருப்பூா் மாவட்டங்களை உள்ளடக்கிய ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரகத்தை ஒட்டிய பகுதிகளில் ஒற்றை ஆண் காட்டு யானை தாக்கியதில் கடந்த நான்கு மாதங்களில் மட்டும் மூன்று போ் உயிரிழந்துள்ளனா், 7 போ் காயமடைந்துள்ளனா். 

இந்நிலையில், யானையை பிடிக்க தமிழக அரசு உத்தரவிட்டதை தொடா்ந்து 70 போ் கொண்ட வனத்துறையினர், 25-க்கும் அதிகமான போலீஸார் என மொத்தம் 100 போ் கொண்ட குழுவினா் அா்த்தநாரிபாளையம் பெருமாள் மலைப்பகுதியில் முகாம் அமைத்துள்ளனா். 

இதற்கிடையில் டாப்சிலிப்பில் இருந்து கும்கி யானைகள் கலீம், பாரி ஆகியவை அா்த்தநாரிபாளையம் கொண்டுவரப்பட்டு வனப்பகுதி அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

யானை விவசாயப் பகுதிக்குள் வரும் வழியில் மாட்டுத்தீவனங்கள், யானைக்கு பிடித்தமான 100 கிலோ அரிசி போன்ற உணவுப்பொருட்களை போட்டு வைத்து அதை உணவாக எடுத்துக்கொள்ளும் போது மயக்க ஊசி செலுத்தி கும்கி யானைகள் உதவியுடன் பிடிக்க வனத்துறையினா் திட்டமிட்டுள்ளனா். 

இந்நிலையில், ஒற்றை ஆண் காட்டு யானையை பிடிக்கும் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அா்த்தநாரிபாளையம் அருகே உள்ள வனப்பகுதி உயரமான மலைகள், பள்ளங்கள் நிறைந்து காணப்படுவதால் யானையை வனப்பகுதிக்குள் சென்று பிடிப்பதில் சிரமம் உள்ளது. 

பொள்ளாச்சியில் இருக்கும் ரேஷன் கடைகள் மற்றும் வீடுகளுக்குள் புகுந்து அரிசியை விரும்பி சாப்பிடுவது இந்த யானையின் வழக்கம். அதனாலேயே இந்த யானைக்கு அரிசி ராஜா என்று அவ்வூர் மக்கள் பெயர் வைத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com