கல்யாணத்துக்கு புது விதமா பரிசு கொடுக்க நினைச்சதெல்லாம் சரி! அதுக்காக இப்படியா?!
திருப்பூரைச் சேர்ந்த இளைஞர் நிஜந்தனின் திருமண வரவேற்பு நண்பர்கள் மற்றும் உறவினர்களால் களைகட்டியது.


திருப்பூர்: திருப்பூரைச் சேர்ந்த இளைஞர் நிஜந்தனின் திருமண வரவேற்பு நண்பர்கள் மற்றும் உறவினர்களால் களைகட்டியது.
அப்போது அங்கே வந்த நிஜந்தனின் நண்பர்கள், ஒரு அழகான பரிசை அவரிடம் கொடுத்து, அங்கேயே திறந்துபார்க்குமாறு வலியுறுத்தினர்.
நண்பர்களின் அன்புக் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நிஜந்தனும், அந்த பரிசைப் பிரித்தார். அங்கிருந்தவர்கள் எல்லாம் ஆவலில் ஆழ்ந்தனர். ஆனால், அங்கு நின்றிருந்த யாருமே எதிர்பாராத வகையில் அந்த பரிசுப் பெட்டிக்குள் இருந்தது பரிசல்ல.. உயிரோடு இருந்த தண்ணீர்பாம்பு.
இதைப் பார்த்ததும் மணப்பெண் அதிர்ச்சியடைந்தார். ஆனால் மணமகனோ, இந்த விளையாட்டெல்லாம் தேவையா என்று பரிசுப் பொருள் கொடுத்த நண்பர்களை செல்லமாகக் கடிந்து கொண்டார். உடனே அங்கு பாம்பைப் பார்க்க சிறார்களின் கூட்டம் கூடியது.
திருமண வரவேற்பு முடிந்ததும், நிஜந்தனின் குடும்பத்தினர், அந்த பாம்பை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் கொண்டுச் சென்று விட்டுவிட்டனர்.
இது குறித்து நண்பர்கள் கூறுகையில், பாம்பு பிடிக்கும் தொழிலைச் செய்து வரும் நிஜந்தனின் திருமணத்துக்கு புது விதமாகப் பரிசளிக்க விரும்பினோம். எனவே, ஒரு பாம்பு பிடிப்பவரிடம் கேட்டு விஷம் இல்லாத தண்ணீர் பாம்பை வாங்கி வந்து, அதனை தகுந்த வசதியோடு பேக் செய்து பரிசாக அளித்தோம் என்கிறார்கள் சிரித்தபடி..
அவர்கள் வேண்டுமானால் சிரிக்கலாம் இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட உறவினர்கள் பரிசு கொடுக்கவே மேடை பக்கம் செல்ல பயந்திருப்பார்கள் என்பது உண்மை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...