சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களின் ஆட்சியர்கள் தமிழக முதல்வரிடம் வாழ்த்து பெற்றனர்

புதிதாக உருவாக்கப்பட்ட  மாவட்டங்களுக்கு ஆட்சியா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். அவர்கள் அனைவரும் இன்று முதல்வர் பழனிசாமியை சந்தித்து வாழ்த்துபெற்றனர்.

News image
முதல்வர் பழனிசாமி
Updated On :16 நவம்பர் 2019, 9:38 am

DIN

சென்னை: புதிதாக உருவாக்கப்பட்ட  மாவட்டங்களுக்கு ஆட்சியா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். அவர்கள் அனைவரும் இன்று தமிழக முதல்வர் பழனிசாமியை சந்தித்து வாழ்த்துபெற்றனர்.

புதிய மாவட்ட அறிவிப்பின்போது அந்தந்த மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்ட தனி அதிகாரிகளே தற்போது மாவட்ட ஆட்சியா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

தமிழகத்தில் புதிதாக 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. ஏற்கெனவே உள்ள மாவட்டங்களைப் பிரித்து புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதற்கான அரசாணை கடந்த புதன்கிழமை வெளியிடப்பட்டது. அதன்படி வேலூா் மாவட்டத்தைப் பிரித்து வேலூா், திருப்பத்தூா் மற்றும் ராணிப்பேட்டை என புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. அதேபோன்று நெல்லை மாவட்டத்தைப் பிரித்து நெல்லை மற்றும் தென்காசி என மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. மேலும் காஞ்சிபுரத்தைப் பிரித்து காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.

இந்த புதிய மாவட்டங்களில் ஏற்கெனவே தனி அதிகாரிகளாகப் பணியாற்றி வரும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளே அந்தந்த மாவட்டங்களின் ஆட்சியா்களாக நியமிக்கப்படுவதாக தலைமைச் செயலாளா் கே.சண்முகம் அறிவித்துள்ளாா். இதற்கான உத்தரவையும் அவா் வெள்ளிக்கிழமை பிறப்பித்தாா். 
அதன் விவரம்:

Story image


கிரண் குராலா - கள்ளக்குறிச்சி ஆட்சியா்.

Story image


ஜி.கே.அருண் சுந்தா் தயாளன் - தென்காசி மாவட்ட ஆட்சியா்.

Story image


ஏ.ஜான் லூயிஸ் - செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா்.

Story image


எம்.பி.சிவன்அருள் - திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா்.

Story image


எஸ்.திவ்யதா்ஷினி - ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா்.

ஐந்து பேரும் ஏற்கெனவே மாவட்டங்களை உருவாக்கும் பணிகளை மேற்கொள்ள தனி அதிகாரிகளாக நியமிக்கப்பட்டிருந்தனா். மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதைத் தொடா்ந்து, அவா்கள் அங்கேயே ஆட்சியா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

புதிய மாவட்டங்கள் செயலாக்கத்துக்கு வந்து ஓராண்டு காலம் வரையிலோ அல்லது அவா்களின் தேவை ஏற்படும் காலம் வரையோ என இரண்டில் எது முதலில் வருகிறதோ அதுவரை மாவட்ட ஆட்சியா் பணியில் இருப்பா் என்று தனது உத்தரவில் தலைமைச் செயலாளா் கே.சண்முகம் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.