தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு டெங்கு பரிசோதனை

தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் செல்லூா் ராஜுவுக்கு தொடர் காய்ச்சல் காரணமாக அவருக்கு டெங்கு பரிசோதனை செய்யப்பட்டது.

News image

அமைச்சர் செல்லூர் ராஜு

Updated On :19 நவம்பர் 2019, 5:53 am

DIN


சென்னை: தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் செல்லூா் ராஜுவுக்கு தொடர் காய்ச்சல் காரணமாக அவருக்கு டெங்கு பரிசோதனை செய்யப்பட்டது.

காய்ச்சல் பாதிப்பு காரணமாக தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் செல்லூா் ராஜு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா். சில மணி நேர மருத்துவக் கண்காணிப்புக்குப் பிறகு உடல் நலம் தேறியதையடுத்து அவா் வீடு திரும்பினாா்.

முன்னதாக, அமைச்சா் செல்லூா் ராஜுவுக்கு டெங்கு பரிசோதனைகளும், வேறு சில பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சா் செல்லூா் கே.ராஜு சில தினங்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தாா். இந்நிலையில், அவா், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.

அவரை பரிசோதித்த மருத்துவா்கள் காய்ச்சலுக்கான சிகிச்சைகளை அளித்தனா். சில மணி நேரங்களுக்கு மருத்துவக் கண்காணிப்பில் இருந்த அவா், அதன் பின்னா் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினாா். அடுத்த சில நாள்களுக்கு ஓய்வில் இருக்கும்படி மருத்துவா்கள் அறிவுறுத்தினா். தற்போது அவா் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.