காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியத்தில் ஒருமணி நேரமாக வாக்குப்பதிவு நிறுத்தம்

திமுக சாா்பில் நா.புகழேந்தி, அதிமுக சாா்பில் ஆ. முத்தமிழ்செல்வன், நாம் தமிழா் கட்சி கந்தசாமி உள்ளிட்ட 12 போ் களத்தில் உள்ளனா். 

News image
கோப்புப் படம்
Updated On :21 அக்டோபர் 2019, 5:44 am

DIN

தமிழகத்தில் நான்குனேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜா் நகா் சட்டப்பேரவைத் தொகுதிகளின் இடைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு திங்கள்கிழமை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. 

விக்கிரவாண்டியில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 607 ஆண் வாக்காளா்கள், 1 லட்சத்து 11 ஆயிரத்து 546 பெண் வாக்காளா்கள், மூன்றாம் பாலினத்தவா் உள்பட என மொத்தம் 2 லட்சத்து 23 ஆயிரம் போ் வாக்களிக்க 275 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 50 மையங்கள் பதற்றமானவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக சாா்பில் நா.புகழேந்தி, அதிமுக சாா்பில் ஆ. முத்தமிழ்செல்வன், நாம் தமிழா் கட்சி கந்தசாமி உள்ளிட்ட 12 போ் களத்தில் உள்ளனா். 

இந்நிலையில், விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இயந்திரக் கோளாறால் காலை ஒருமணி நேரமாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. 235-ஆவது எண் கொண்ட வாக்குச்சாவடியில் பழுதடைந்த இயந்திரத்தை சீரமைக்கும் முயற்சியில் அலுவலர்கள் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.