
கனமழை எதிரொலி காரணமாக புதுச்சேரியில் பள்ளிகளுக்கும், நீலகிரியில் 4 தாலுக்காக்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை (வியாழக்கிழமை) விடுமுறை அளித்து முதல்வர் வி. நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.
காரைக்கால்:
அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (வியாழக்கிழமை) விடுமுறை அளிப்பதாக, அம்மாவட்ட ஆட்சியர் ஏ. விக்ரந்த் ராஜா அறிவித்துள்ளார்.
நீலகிரி:
உதகை, குன்னூர், கோத்தகிரி மற்றும் குந்தா ஆகிய 4 தாலுகாக்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (வியாழக்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ளார்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிளுக்கு மட்டும் இன்று ஒருநாள் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் உத்தரவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.