/

புதுச்சேரியில் சாலைகளுக்கு கருணாநிதி பெயர்: நாராயணசாமி மற்றும் கிரண்பேடிக்கு ஸ்டாலின் நன்றி 

புதுச்சேரியில் இரண்டு சாலைகளுக்கு கருணாநிதி பெயர் சூட்ட நடந்த முயற்சிகளுக்காக, புதுவை முதல்வர் நாராயணசாமி மற்றும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு திமுங்க தலைவர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 9:59 am

DIN

சென்னை: புதுச்சேரியில் இரண்டு சாலைகளுக்கு கருணாநிதி பெயர் சூட்ட நடந்த முயற்சிகளுக்காக, புதுவை முதல்வர் நாராயணசாமி மற்றும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு திமுங்க தலைவர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் உள்ள இரண்டு சாலைகளுக்கு, கருணாநிதி நினைவாக பெயர் சூட்ட முயற்சிகளை முன்னெடுத்த புதுவை முதல்வர் நாராயணசாமி மற்றும் மாநில துணை நிலை ஆளுநர் கிரண் பேடி இருவருக்கும்  தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட வாழ்த்து செய்தியின் விவரம் பின்வருமாறு:

புதுச்சேரியில் உள்ள இரண்டு சாலைகளுக்கு தலைவர் கலைஞர் அவர்களின் நினைவாக பெயர் சூட்ட முயற்சிகளை முன்னெடுத்த புதுவை முதல்வர் மாண்புமிகு திரு. நாராயணசாமி அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோல், அதற்கு ஒப்புதல் அளித்த புதுவை மாநில துணை நிலை ஆளுநர் கிரண் பேடி அவர்களுக்கும் எனது நன்றி!

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.