டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

வாணியம்பாடியில் வீட்டில் திருடி சமைத்து  சாப்பிட்டுச் சென்ற திருடர்கள்

வாணியம்பாடியில் வீட்டின் பூட்டை உடைத்து இருசக்கர வாகனங்கள், தொலைக்காட்சிப் பெட்டி போன்ற வீட்டு உபயோகப் பொருள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றதோடு,

News image
Updated On :5 செப்டம்பர் 2019, 2:33 am

DIN

வாணியம்பாடியில் வீட்டின் பூட்டை உடைத்து இருசக்கர வாகனங்கள், தொலைக்காட்சிப் பெட்டி போன்ற வீட்டு உபயோகப் பொருள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றதோடு, வீட்டினுள் சமைத்து சாப்பிட்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  
வேலூர் மாவட்டம், வாணியம்பாடி சென்னாம்பேட்டை தக்கடித் தெருவில் வசித்து வருபவர் பாரூக்அகமத். இவர் ஞாயிற்றுக்கிழமை உறவினரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக குடும்பத்துடன் பெங்களூரு சென்று விட்டார். செவ்வாய்க்கிழமை காலை வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்து கிடந்ததை கண்ட அப்பகுதி மக்கள், வாணியம்பாடி நகர போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். 
தகவலறிந்து அங்கு வந்த டிஎஸ்பி பாலகிருஷ்ணன், காவல்ஆய்வாளர் சந்திரசேகர் அங்கு விசாரணை மேற்கொண்டனர். 
வீட்டினுள் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனம், தொலைக்காட்சிப் பெட்டி மற்றும் வீட்டு உபயோகப் பொருள்களை மர்ம நபர்கள் திருடிச்  சென்றிருப்பது தெரியவந்தது.  மேலும் மர்ம நபர்கள் நள்ளிரவில் வீட்டினுள் சமைத்து சாப்பிட்டு சென்றுள்ளனர். வீட்டின் உரிமையாளர் வந்த பிறகே கொள்ளை போன பொருள்களின் முழுவிவரம் தெரிய வரும் என்று போலீஸார் தெரிவித்தனர். இதுகுறித்து நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.