மு.க.ஸ்டாலினை சி.பி.ராதாகிருஷ்ணன் புகழ்ந்தது பாஜகவின் கருத்தா என தெரியவில்லை: அமைச்சர் ஜெயக்குமார்
மு.க.ஸ்டாலினை சி.பி.ராதாகிருஷ்ணன் புகழ்ந்தது பாஜகவின் கருத்தா என தெரியவில்லை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.


மு.க.ஸ்டாலினை சி.பி.ராதாகிருஷ்ணன் புகழ்ந்தது பாஜகவின் கருத்தா என தெரியவில்லை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
ப.சிதம்பரம் கைதுக்கு பின்னர் மத்திய அரசு மீது ஸ்டாலினுக்கு சாப்ட்கார்னர் வந்துவிட்டது. இப்போது எல்லாம் மத்திய அரசை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சிப்பதில்லை. அடுத்த கைது பயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் இருக்கிறார்.
மு.க.ஸ்டாலினை சி.பி.ராதாகிருஷ்ணன் புகழ்ந்தது பாஜகவின் கருத்தா என தெரியவில்லை. தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்துக்கு எவ்வித பாதிப்பும் இருக்காது. வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் இங்கு ரேசன் வாங்கினால், அவர்களுக்கு விலையில்லா அரிசி வழங்கப்படாது. இவ்வாறு அவர் கூறினார்.
கருணாநிதிக்கு பிறகு எங்களை வீழ்த்தி வெற்றிபெற்ற தளபதியாக ஸ்டாலின் திகழ்கிறார் என திருப்பூரில் வெள்ளக்கோவில் சாமிநாதன் இல்ல திருமண விழாவில் பாஜகவின் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...