புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

இனி புதிய பாடத்திட்டத்தில் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு: கால அட்டவணை வெளியீடு

தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டத்தின்படியே தேர்வு நடைபெறும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.   

News image
Updated On :12 செப்டம்பர் 2019, 9:50 pm

DIN

தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டத்தின்படியே தேர்வு நடைபெறும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.   
இதுகுறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் சி.உஷா ராணி வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி: 
நிகழ் கல்வியாண்டு (2019-20) முதல் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே, புதிய பாடத்திட்டத்தின்படியே அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் தனித்தேர்வர்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படும். ஏற்கெனவே பழைய பாடத் திட்டத்தில் தேர்வெழுதி தேர்ச்சி பெறாதவர்கள் தோல்வியுற்ற பாடங்களை மட்டும் புதிய பாடத்திட்டத்தில் எழுதிக் கொள்ளலாம். 
இதற்கான தேர்வு கால அட்டவணை தற்போது வெளியிடப்படுகிறது. அதன்படி ஏப்ரல் 2-ஆம் தேதி தமிழ், ஏப்ரல் 3- ஆங்கிலம், ஏப்ரல் 7-கணிதம், ஏப்ரல் 8-அறிவியல்,  ஏப்ரல் 9-  சமூக அறிவியல் ஆகிய தேதிகளில் தேர்வுகள் நடைபெறும் என அதில் கூறப்பட்டுள்ளது. இந்தத் தேர்வுகள் காலை 10 நண்பகல் 12 மணி வரை நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.