உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!கைது நடவடிக்கையை காமெடியாக பார்கிறேன்! உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கையை காமெடியாக பார்கிறேன்! உதயநிதி ஸ்டாலின் உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!உதயநிதி ஸ்டாலின் கைது? நீலாங்கரை வீட்டின் முன்பு போலீஸ் குவிப்பு!தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்நாளை பட்ஜெட் தாக்கல்: இன்று மாலை தவெக எம்எல்ஏக்கள் கூட்டம்!இன்று தமிழகத்தை அடைகிறது கா்நாடக அணை காவிரி நீா்!தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: முக்கிய அறிவிப்புகள் வெளியாகின்றனஇந்தியப் பொருளாதாரம் 7.7% வளா்ச்சி!தமிழகத்தில் ஆக. 9 வரை மழைக்கு வாய்ப்புஉறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் முதலிடம்!
/

காப்பான் திரைப்படத்துக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி

நடிகர்கள் மோகன்லால், சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ள காப்பான் திரைப்படத்துக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

News image
Updated On :31 ஜனவரி 2024, 3:34 pm IST


நடிகர்கள் மோகன்லால், சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ள காப்பான் திரைப்படத்துக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 
சென்னை உயர்நீதிமன்றத்தில் குரோம்பேட்டையைச் சேர்ந்த ஜான் சார்லஸ் தாக்கல் செய்த மனுவில், நடிகர்கள் மோகன்லால், சூர்யா, ஆர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் காப்பான். இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. நான் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக திரைத்துறையில் பணியாற்றி பல கதைகளை எழுதியுள்ளேன். சரவெடி என்னும் தலைப்பில் ஒரு கதையை எழுதினேன். அந்த கதையை காப்புரிமைச் சட்டத்தின் கீழ் கடந்த 2016-ஆம் ஆண்டு பதிவு செய்தேன். இந்த கதையை இயக்குநர் கே.வி.ஆனந்திடம் கூறியிருந்தேன். அவர் இந்த கதையை திரைப்படமாக்கும் போது எனக்கு வாய்ப்பு தருவதாக கூறியிருந்தார். அந்த வாய்ப்புக்காக நானும் காத்திருந்தேன்.
ஆனால் என்னுடைய கதையான சரவெடியை இயக்குநர் கே.வி.ஆனந்த் காப்பான் என்ற பெயரில் திரைப்படமாக எடுத்துள்ளார். அண்மையில் இந்த திரைப்படத்தின் விளம்பரம் தொலைக்காட்சிகளில் வெளியானது. எனவே எனது அனுமதி இல்லாமல் என்னுடைய கதையை வேறொரு தலைப்பில் திரைப்படமாக எடுத்துள்ளார். எனவே இந்த திரைப்படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார். 
இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது படத்தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த பதில் மனுவில், மனுதாரரை காப்பான் திரைப்படத்தின் இயக்குநர் கே.வி.ஆனந்த் சந்திக்கவே இல்லை. மேலும் சரவெடி படத்தின் கதையும் காப்பான் திரைப்படத்தின் கதையும் வெவ்வேறானவை. எனவே இந்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரப்பட்டிருந்தது.
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.