சென்னை சிட்லபாக்கத்தில் லாரி மோதியதாலேயே மின்கம்பம் விழுந்து சேதுராஜ் என்பவர் உயிரிழப்பு - மின்துறை அமைச்சர் தங்கமணி

சென்னை சிட்லபாக்கத்தில் லாரி மோதியதாலேயே மின்கம்பம் விழுந்து சேதுராஜ் உயிரிழந்தார் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். 
சென்னை சிட்லபாக்கத்தில் லாரி மோதியதாலேயே மின்கம்பம் விழுந்து சேதுராஜ் என்பவர் உயிரிழப்பு - மின்துறை அமைச்சர் தங்கமணி

சென்னை சிட்லபாக்கத்தில் லாரி மோதியதாலேயே மின்கம்பம் விழுந்து சேதுராஜ் உயிரிழந்தார் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். 
சென்னை சிட்லப்பாக்கம் சாரங்கன் அவென்யு கல்யாணசுந்தரம் தெருவைச் சேர்ந்தவர் பா.சேதுராஜ் (44). தண்ணீர் கேன் வியாபாரியான இவர், திங்கள்கிழமை இரவு உணவருந்தி விட்டு, தெரு நாய்களுக்கு தனது வீட்டின் முன் உணவு அளித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு சேதமடைந்து நின்று கொண்டிருந்த ஒரு மின் கம்பம் திடீரென முறிந்து அவர் மீது விழுந்தது. வியாபாரியின் அலறல் சத்தம் கேட்டு வீட்டுக்குள் இருந்த அவரது மனைவி சங்கரேஸ்வரி, வெளியே வந்தார். 
தன் கணவர் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், 108 அவசர ஆம்புலன்ஸ் சேவை கட்டுப்பாட்டு அறையை செல்லிடப்பேசி மூலம் தொடர்புக் கொண்டு பேசினார். அப்போது அங்கிருந்த பணியாளர், தனியார் மருத்துவமனை அழைத்துச் செல்வதற்கு 108 ஆம்புலன்ஸ் வேனை அனுப்பமாட்டோம் என்று கூறியுள்ளார்.
 இதையடுத்து சங்ரேஸ்வரி, பக்கத்து வீட்டினர் உதவியுடன் ஒரு தனியார் வாகனத்தில் ஆபத்தான நிலையில் இருந்த சேதுராஜை அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு சிகிச்சை பெற்று வந்த சேதுராஜ், சிறிது நேரத்தில் இறந்தார். இதைத் தொடர்ந்து அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இது குறித்து சிட்லப்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில், பழுதடைந்த மின் கம்பத்தினால் விபத்து ஏற்பட்டு, சேதுராஜ் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. 
இதுகுறித்து இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மின்துறை அமைச்சர் தங்கமணி, 
சென்னை சிட்லபாக்கத்தில் லாரி மோதியதாலேயே மின்கம்பம் விழுந்து சேதுராஜ் உயிரிழந்தார். மின்கம்பம் மீது மோதிய லாரியை கண்டறிய சிசிடிவி காட்சிகள் உதவியுடன் விசாரணை நடக்கிறது. தரமற்ற மின்கம்பங்கள் என்பதே கிடையாது. அனைத்து மின்கம்பங்களும் தரமாகவே உள்ளன. மின் பெட்டிகளில் சுவரொட்டி ஒட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் வகையில் புதிய சட்டம் இயற்றப்படும். முகலிவாக்கம் மின் விபத்துக்கும் மின்சாரத்துறைக்கும் தொடர்பில்லை, வடகிழக்கு பருவ மழையை எதிர்க்கொள்ள மின்துறை தயார் நிலையில் உள்ளது என்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com