தஹில ராமாணீ ராஜிநாமா ஏற்பு: சென்னை உயர் நீதிமன்றத்துக்கு பொறுப்பு நீதிபதி அறிவிப்பு

பணி இடமாற்றத்தை மறுபரிசீலனை செய்யக் கோரி தலைமை நீதிபதி வி.கே.தஹில ராமாணீ உச்ச நீதிமன்ற கொலீஜியத்திடம் கோரிக்கை வைத்தார். 
தஹில ராமாணீ | கோப்புப் படம்
தஹில ராமாணீ | கோப்புப் படம்

சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி வி.கே.தஹில ராமாணீயை, மேகாலய மாநில உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமித்தும், மேகாலய மாநில உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான ஏ.கே.மிட்டலை சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமித்தும் உச்ச நீதிமன்ற தலைமைத் நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான மூத்த நீதிபதிகள் குழு (கொலீஜியம்) மத்திய அரசுக்குப் ஆகஸ்ட் 28-ஆம் தேதி பரிந்துரை செய்தது. 

இந்த நிலையில் தனது பணி இடமாற்றத்தை மறுபரிசீலனை செய்யக் கோரி தலைமை நீதிபதி வி.கே.தஹில ராமாணீ உச்ச நீதிமன்ற கொலீஜியத்திடம் கோரிக்கை வைத்தார். ஆனால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

இதனால் பணியிட மாற்றத்துக்கு அதிருப்தி தெரிவித்த தலைமை நீதிபதி வி.கே.தஹில ராமாணீ, செப். 6-ஆம் தேதி பதவியை ராஜிநாமா செய்தார். இதனிடையே தஹில ராமாணீ இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து செப்.18-ஆம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில ராமாணீ ராஜிநாமா கடிதம் குடியரசுத் தலைவரால் ஏற்கப்பட்டதாக மத்திய சட்ட அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது. இதையடுத்து மூத்த நீதிபதி வினீத் கோத்தாரி சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக பொறுப்பு வகிப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com