தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

இசை பல்கலை.க்கு ஜெயலலிதா பெயர்: தமிழக அரசு உத்தரவு

தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்துக்கு, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயர் சூட்டப்பட்டுள்ளது.

News image
Updated On :23 செப்டம்பர் 2019, 11:02 pm

DIN


தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்துக்கு, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அபூர்வ வர்மா அண்மையில் பிறப்பித்தார். 
அதன் விவரம்: தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கு கடந்த 2013-ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டு, அதே ஆண்டு நவம்பர் 14-இல் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. 
இந்த நிலையில், கலை மற்றும் பண்பாட்டுத் துறை ஆணையரகத்தின் பரிந்துரையை ஏற்று, தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் பெயரை தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகம் என பெயர் மாற்றம் செய்து உத்தரவிடப்படுகிறது என்று தனது உத்தரவில் அபூர்வ வர்மா தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.