கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

முதுநிலை ஆசிரியர் தேர்வு: 10 மாவட்டங்களில் கூடுதல் பாதுகாப்பு

தமிழகத்தில் வரும் செப். 27-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள முதுநிலை ஆசிரியர் தேர்வின்போது பதற்றமான மாவட்டங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு ஆசிரியர்

News image
கோப்புப் படம்
Updated On :31 ஜனவரி 2024, 10:10 am

DIN


தமிழகத்தில் வரும் செப். 27-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள முதுநிலை ஆசிரியர் தேர்வின்போது பதற்றமான மாவட்டங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் முதுநிலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1 ஆகிய தேர்வுகளுக்கு  1 லட்சத்து 85 ஆயிரத்து 463 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.  2,144 காலிப் பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது.  இவர்களுக்கான எழுத்துத் தேர்வு ஆன்-லைன் மூலம் நடத்தப்படவுள்ளது. இதில், முதுநிலை ஆசிரியர் பணிக்கான ஆன்-லைன் தேர்வு வரும் 27-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வு தமிழ்நாடு முழுவதும் 154 மையங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தத் தேர்வில், அதிகபட்சமாக தமிழ்ப் பாடத்தை 33 ஆயிரத்து 702 பேரும், ஆங்கிலப் பாடத்தை 32 ஆயிரத்து 387 பேரும், வேதியியல் பாடத்தை 14 ஆயிரத்து 502 பேரும். வணிகவியல் பாடத்தை 14 ஆயிரத்து 862 பேரும், இயற்பியல் பாடத்தை 14 ஆயிரத்து 372 பேரும், இந்திய கலாசார தேர்வினை 11 ஆயிரம் பேரும் எழுதுகின்றனர்.
இந்த நிலையில் சில நாள்களில் நடைபெறவுள்ள இந்தத் தேர்வுகளுக்கு கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. 
இது குறித்து, அதிகாரிகள் கூறுகையில்,  கடந்த ஜூன் மாதம் முதன்முறையாக நடைபெற்ற பள்ளி ஆசிரியர் பணிக்கான தேர்வின்போது, தேர்வு மையத்தில் தேர்வர்கள் சிலர் தவறான நடவடிக்கையில் ஈடுபட்டனர். 
எனவே, இத்தேர்வில் அவற்றை தவிர்க்கும் நோக்குடன், பதற்றமான மாவட்டங்களான கோயம்புத்தூர், நாமக்கல், ஈரோடு, தஞ்சாவூர், திருநெல்வேலி உள்ளிட்ட 10 மாவட்டங்களிலுள்ள தேர்வு மையங்களில், கூடுதலாகப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக மாவட்ட ஆட்சியர்களுக்கும், மாவட்டக் காவல் துறை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.