தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

விக்கிரவாண்டியில் உதயநிதி! மனு தாக்கல் செய்த கௌதம சிகாமணி!

திமுகவினர் 23-ஆம் தேதி அறிவாலயத்தில் மனு அளிக்கலாம் என்று திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். 

News image
Updated On :23 செப்டம்பர் 2019, 7:47 am

DIN

தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி, நான்குனேரி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் பேரவைத் தொகுதிகளுக்கு அக்.21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை (செப். 23) தொடங்குகிறது.

விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தலில் திமுகவும், நான்குனேரி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிகளில் காங்கிரஸூம் போட்டியிடும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பும் திமுகவினர் 23-ஆம் தேதி அறிவாலயத்தில் மனு அளிக்கலாம் என்று திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். வேட்பாளர் நேர்காணல் 24-ஆம் தேதி நடைபெற உள்ளது. விக்கிரவாண்டி தொகுதிக்கான வேட்பாளரை மு.க.ஸ்டாலின் அறிவிக்க உள்ளார்.

இந்நிலையில், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் அக்கட்சித் தலைவரின் மகனும், திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்று முன்னாாள் அமைச்சர் பொன்முடி மகனும், கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதம சிகாமணி திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.