சென்னை: நான்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுவை காமராஜ் நகர் தொகுதிகளுக்கு புதனன்று வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று துணை முதல்வர் ஓபிஎஸ் தகவல் தெரிவித்துள்ளார்.
நான்குனேரி, விக்கிரவாண்டி சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை தொடங்கியது. ஆளும்கட்சியான அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனுக்களை அளிக்கும் நிகழ்வு, சென்னையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. திங்கள்கிழமை பிற்பகல் 3 மணி வரை விருப்ப மனுக்களை அளிக்கலாம் என்று அதிமுக தலைமை அறிவித்திருந்தது.
இந்த நிலையில், இடைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கோரி சுமார் 90 பேர் வரை விருப்ப மனுக்களை அளித்திருந்தனர். இதேபோன்று, புதுச்சேரி மாநிலம் காமராஜ் நகர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட 5 பேர் வரை விருப்ப மனு அளித்திருந்தனர்.
இடைத் தேர்தல்களில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தவர்களுடன் திங்கள்கிழமை மாலை நேர்காணல் நடத்தப்பட்டது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நடந்த இந்த நேர்காணலை ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்கள் நடத்தினர். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி, அமைப்புச் செயலாளர் ஆர்.வைத்திலிங்கம், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் தமிழ்மகன் உசேன், இலக்கிய அணிச் செயலாளர் பா.வளர்மதி, மருத்துவ அணிச் செயலாளர் பி.வேணுகோபால் ஆகியோர் அடங்கிய ஆட்சிமன்றக் குழுவானது நேர்காணலை நடத்தியது.
மாலை 4 மணிக்குத் தொடங்கிய நேர்காணல், இரவு 7.30 மணி வரை நடந்தது. நேர்காணலை முடித்த பின் வெளியே வந்த இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி, வேட்பாளரை இறுதி செய்யவில்லை என்றார்.
இந்நிலையில் நான்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுவை காமராஜ் நகர் தொகுதிகளுக்கு புதனன்று வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று துணை முதல்வர் ஓபிஎஸ் தகவல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செவ்வாயன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'இந்த இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுவை காமராஜ் நகர் தொகுதிகளின் அதிமுக வேட்பாளர்கள் நாளை காலை அறிவிக்கப்படுவார்கள்' என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கத்தார் எரிவாயு ஆலையில் வெடிவிபத்து: தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் பலி!

அமோனியா வாயு கசிவு: பலியானோர் எண்ணிக்கை 9-ஆக உயர்வு!

விதவைகள் நாள்: துணை இழந்தவர்களுக்கு தோள் கொடுத்த லூம்பா!

இந்தியாவில் 7,000 எரிபொருள் நிலையங்கள்!
விடியோக்கள்

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |




