டிஎன்பிஎஸ்சி 'குரூப் 2' தேர்வில் மொழித்தாள் நீக்கம்: திமுக எம்பி கனிமொழி அதிருப்தி
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வுகளில் இருந்து தமிழ் மொழிப்பாடம் நீக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.


டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வுகளில் இருந்து தமிழ் மொழிப்பாடம் நீக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ ஆகிய 2 பிரிவு பணியிடங்களுக்கும் இனி ஒரே மாதிரியான தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் டி.என்.பி.எஸ்.சியின் இந்த முடிவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து திமுக எம்.பி.,கனிமொழி தனது டிவிட்டரில் கூறியிருப்பதாவது:-
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வுகளில் இருந்து தமிழ் மொழிப்பாடம் நீக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழே தெரியாமல் பிற மாநிலங்களிலிருந்து வருபவர்கள் தமிழக அரசு பணியில் சேர்வதற்கே இது வழிவகுக்கும்.
தமிழ அரசு இந்த நடவடிக்கையை கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...