மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஐ.நா. சபையில் தமிழில் பேசிய பிரதமர் மோடி: கவிஞர் வைரமுத்து பாராட்டு

ஐ.நா. சபையில் தமிழில் பேசிய பிரதமர் மோடியை கவிஞர் வைரமுத்து பாராட்டியுள்ளார். 

News image

வைரமுத்து

Updated On :28 செப்டம்பர் 2019, 9:59 am

ஐ.நா. சபையில் தமிழில் பேசிய பிரதமர் மோடியை கவிஞர் வைரமுத்து பாராட்டியுள்ளார். 

ஐ.நா. பொதுச் சபையின் 74-ஆவது கூட்டம், நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமர்வில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அதில், பிரதமர் மோடி பேசும்போது, சுவாமி விவேகானந்தர், கணியன் பூங்குன்றனார் ஆகியோரை மேற்கோள் காட்டி பேசியதாவது: 1893-இல் சிகாகோ நகரில் நடைபெற்ற ஆன்மிக மாநாட்டில் விவேகானந்தர் பேசும்போது, அமைதியையும், நல்லிணக்கத்தையும் வலியுறுத்தினார். 

125 ஆண்டுகளுக்கு முன் அவர் சொன்ன அதே செய்தியை, இந்தியா தற்போதும் உலக நாடுகளுக்கு வலியுறுத்துகிறது. "யாதும் ஊரே, யாவரும் கேளிர்' என்று தமிழ்க் கவிஞர் கணியன் பூங்குன்றனார் கூறினார். அனைத்து ஊர்களும் நம் ஊரே, அனைவரும் நம் உறவினர்களே என்பது அதன் பொருள். எல்லைகள் கடந்து சிந்திப்பதே இந்தியாவின் தனித்துவமான பண்பு என்றார் மோடி.

இது குறித்து கவிஞர் வைரமுத்து தனது டிவிட்டரில், “ஐ.நா சபையில் தமிழ் சொன்னீர்கள் பேரானந்தம் பிரதமர் அவர்களே, தாயகத்திலும் தமிழ் உயர்த்தினால் நன்றி உரைப்போம் நாங்களே” என்று பதிவிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.