மதுரை காமராஜர் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியரும், தமிழ் ஆர்வலருமான இரா. மோகன் (69) உடல்நலக்குறைவால் புதன்கிழமை காலமானார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் ஒப்பிலக்கியத் துறைத் தலைவராக பணியாற்றிய இவர், பட்டிமன்ற நடுவராகவும் இருந்துள்ளார். பேராசிரியர் மோகன் ஒப்பிலக்கியம், தமிழாய்வு, தன் முன்னேற்ற சிந்தனைகள், தமிழ் வளர்ச்சி நூல்கள் உள்பட 150-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
2011-ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ.விஸ்வநாதம் விருது பெற்றுள்ள அவர், சாகித்ய அகாதெமி அமைப்பின் பொதுக்குழு உறுப்பினராக 10 ஆண்டுகள் பதவி வகித்துள்ளார். பேராசிரியர் இரா.மோகன் பணி ஓய்வு பெற்ற பின்னர் காமராஜர் பல்கலைக்கழகத்தின் தகைசால் பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.
அவருக்கு மனைவி, மகள் உள்ளனர். பேராசிரியர் இரா. மோகனின் இறுதிச் சடங்கு மதுரையை அடுத்த நாகமலைப்புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. தொடர்புக்கு: 94436-75931.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொழில்நுட்பக் கோளாறு: பல மையங்களில் தாமதமான ‘க்யூட்’ தோ்வு

ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமிக்கு விலைமதிப்பற்ற ஆபரணங்கள்

மிகப் பெரிய தாக்குதலுக்குத் தயாராகும் ரஷியா

இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



