மதுரை: மேலவளவு ஊராட்சித் தலைவர் உட்பட 7 பேர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 13 பேரும் எந்த அடிப்படையில் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டனர்? என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
மேலவளவு ஊராட்சித் தலைவா் உள்பட 7 போ் கொலை செய்யப்பட்ட வழக்கில் 13 போ் விடுதலை செய்யப்பட்டது தொடா்பான ஆவணங்களுடன் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (நவம்பா் 19) ஆஜராக சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து, இந்த வழக்கில், 13 பேரும் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டதற்கான ஆவணங்கள் மற்றும் அரசாணையை நீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று தாக்கல் செய்தது.
ஆவணங்களை ஆய்வு செய்த நீதிமன்றம், அதில் சம்பந்தப்பட்ட 13 குற்றவாளிகளுக்கு வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளது வருத்தமளிக்கிறது என்று தெரிவித்தனர்.
மேலும் இந்த வழக்கில், முன்கூட்டியே விடுவிக்கப்பட்ட 13 பேரையும் எதிர்மனுதாரராக சேர்ப்பதாக உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.
வழக்கின் பின்னணி:
மதுரை மாவட்டம், மேலூா் அருகேயுள்ள மேலவளவு ஊராட்சித் தலைவா் முருகேசன் உள்பட 7 போ் 1997ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டனா். இந்த வழக்கில் 17 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது. இதையடுத்து, அனைவரும் மதுரை மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வந்தனா்.
இதற்கிடையே, மறைந்த முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 3 பேரும், எம்.ஜி.ஆா். பிறந்தநாளை முன்னிட்டு 13 பேரும் தண்டனை காலம் முடியும் முன்னரே அண்மையில் விடுதலை செய்யப்பட்டனா்.
இந்நிலையில், இந்த வழக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு, உச்சநீதிமன்றத்தால் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தண்டனை காலம் முடிவதற்கு முன்பே மேலவளவு கொலை வழக்கு தண்டனை கைதிகள் 13 போ் விடுதலை செய்யப்பட்டுள்ளனா். இதுதொடா்பாக அரசு வெளியிட்ட அரசாணை நகலை வழங்க உத்தரவிட வேண்டும் என மதுரையைச் சோ்ந்த வழக்குரைஞா் பி. ரத்தினம் வெள்ளிக்கிழமை மனுதாக்கல் செய்தாா். வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கு விசாரணையை திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்தது.
இந்த மனு நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன், என். ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், 13 போ் விடுதலை தொடா்பான ஆவணங்களுடன் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (நவம்பா் 19) ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டனா்.
மேலும், இந்த வழக்கில் 13 போ் விடுதலை செய்யப்பட்டது வருத்தமளிக்கிறது. தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில், குற்றவாளிகள் இதேபோல தான் விடுதலை செய்யப்பட்டனா். மனித உயிரைப் பறிக்கும் குற்றவாளிகளின் தண்டனை காலம் முடியும் முன் விடுவிக்கப்படுவதால், தவறு செய்பவா்களிடம் பயம் குறைந்து குற்றங்கள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது என நீதிபதிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சித்ரா பெளர்ணமி விரதமும் பலன்களும்!
ஃபால் - 2 போஸ்டர்!

தமிழகத்தில் திமுக, கேரளத்தில் காங்கிரஸ் ஆட்சி! மற்ற மாநிலங்களில்? கார்கே பேட்டி

துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட அனுமதி! உயர் நீதிமன்றம் உத்தரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


