சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார் ஏ.கே.மிட்டல்: கொலீஜியம் பரிந்துரை

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த நீதிபதி ஏ.கே.மிட்டலை நியமிக்க உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் குழு (கொலீஜியம்) பரிந்துரை செய்துள்ளது. இதன்படி ஏ.கே.மிட்டலை தலைமை
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார் ஏ.கே.மிட்டல்: கொலீஜியம் பரிந்துரை


சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த நீதிபதி ஏ.கே.மிட்டலை நியமிக்க உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் குழு (கொலீஜியம்) பரிந்துரை செய்துள்ளது. இதன்படி ஏ.கே.மிட்டலை தலைமை நீதிபதியாக நியமித்து மத்திய அரசு விரைவில் உத்தரவு பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தலைமை நீதிபதி மாற்றம்: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்து வருபவர் வி.கே.தஹிலராமாணீ. இவர், கடந்த 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவியேற்றுக் கொண்டார். இந்த நிலையில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே.தஹிலராமாணீயை, மேகாலய மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்தும், மேகாலய மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான ஏ.கே.மிட்டலை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்தும் உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் குழு மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், மூத்த நீதிபதிகள் எஸ்.கே.பாப்டே, என்.வி.ரமணா, அருண் மிஸ்ரா, ஆர்.எஃப். நாரிமன் ஆகியோர் அடங்கிய குழு, கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி இந்த முடிவை எடுத்துள்ளது.மேலும், சிறந்த நிர்வாகம் நடைபெற வேண்டும் என்பதற்காகவே இந்த முடிவை எடுத்துள்ளதாக நீதிபதிகள் குழு தெரிவித்துள்ளது. 

கோரிக்கை நிராகரிப்பு: இந்த நிலையில் இந்த இடமாற்ற முடிவை மறு பரிசீலனை செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே.தஹிலராமாணீ, உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் குழுவுக்கு கோரிக்கை மனு அனுப்பினார். ஆனால், இந்தக் கோரிக்கையை மூத்த நீதிபதிகள் குழு அண்மையில் நிராகரித்து விட்டது. இதனைத் தொடர்ந்து, மேகாலய மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.கே.மிட்டலை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமித்து விரைவில் மத்திய அரசு உத்தரவு பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

புதிய தலைமை நீதிபதி: சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்படவுள்ள ஏ.கே.மிட்டல், கடந்த 1958-ஆம் ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி சத்தீஸ்கர் மாநிலத்தில் பிறந்தார். அவர், தனது இளங்கலை வணிகவியல் படிப்பையும், சட்டப்படிப்பையும் தில்லியில் முடித்தார். பின்னர் பஞ்சாப் - ஹரியாணா  மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றினார். மத்திய, மாநில அரசுப் பணிகள் விவகாரம், உரிமையியல் தொடர்பான வழக்குகளில் நிபுணத்துவம் பெற்றுள்ள இவர், பஞ்சாப்-ஹரியாணா உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
கடந்த 2018-ஆம் ஆண்டு மேகாலயா உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். வரும் 2020-ஆம் ஆண்டு செப்டம்பரில் ஓய்வு பெற உள்ள நிலையில், நீதிபதி ஏ.கே.மிட்டல் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com