வெளிநாட்டு தொழில் முதலீடுகள்: வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்

 தமிழகத்துக்கு தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டது குறித்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  கூறினார்.
வெளிநாட்டு தொழில் முதலீடுகள்: வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்


 தமிழகத்துக்கு தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டது குறித்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  கூறினார்.

இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: வெளிநாடுகளின் முதலீடுகளைப் பெறப் போகிறோம் என்று சொல்லிச் சென்று, வெறுங்கையுடன் திரும்பியிருக்கும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி,  விரக்தியின் உச்சத்துக்கே சென்று, ஸ்டாலின், தான் நினைத்ததை நடத்த முடியாத காரணத்தால் என் மீது  எரிச்சலும், பொறாமையும் கொண்டு பேசி வருகிறார் எனப் பேட்டியளித்திருக்கிறார்.

தமிழகத்தில் இன்றைக்குள்ள தொழிற்சாலைகளும், மாநிலத்துக்குக் கிடைத்த நேரடி அந்நிய முதலீடுகளும் திமுக ஆட்சியில் பெறப்பட்டவை என்ற அடிப்படை விவரத்தைக் கூட அவர் மறந்திருக்கிறார். இந்தியாவிலேயே தமிழகம் முதலீட்டாளர்கள் அதிகம் விரும்பித் தேர்வு செய்து முதலீடு செய்யும் முதன்மை மாநிலமாக திமுக ஆட்சியில்தான் விளங்கியது.

அதிமுக ஆட்சியில் நடைபெற்ற 2 முதலீட்டாளர்கள் மாநாடுகளில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் என்ன ஆயிற்று என்றே தெரியவில்லை. ஆடம்பர வெளிநாட்டு சுற்றுலா நடத்தி விட்டு முதல்வரும், அமைச்சர்களும் திரும்பியுள்ளனர். அரசு நிதியை சொந்த நிதிபோல் பயன்படுத்தி விட்டு திரும்பியிருக்கும் அமைச்சர்களும், முதல்வரும் நிச்சயம் ஒரு நாள் தமிழக மக்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய நேரம் வரும்.

எனவே,  அதிமுக ஆட்சியில் இதுவரை போடப்பட்டுள்ள 443 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின்படி எத்தனைக் கோடி ரூபாய்க்கு முதலீடுகள் பெறப்பட்டுள்ளன. அந்த முதலீடுகள் மூலம் தொடங்கப்பட்டு, செயல்படும் தொழில் நிறுவனங்கள் எத்தனை, அந்நிறுவனங்கள் மூலம் எத்தனை ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கித் தரப்பட்டன என்பதையெல்லாம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விரிவான வெள்ளை அறிக்கையாக வெளியிடத் தயாரா?
அப்படி உண்மைகளை வெளியிட்ட ஒரு வாரத்தில் முதல்வருக்கு திமுக சார்பில் பாராட்டு விழா நடத்தத் தயாராக இருக்கிறேன். என் சவாலை முதல்வர் ஏற்றுக் கொள்ளத் தயாரா என்று அவர் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com