தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கரோனா சிறப்பு வார்டினை கனிமொழி பார்வையிட்டார்

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உள்ள சிறப்பு கரோனா வைரஸ் வார்டினை  தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பார்வையிட்டார்.

News image
Updated On :1 ஏப்ரல் 2020, 5:41 am

DIN

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உள்ள சிறப்பு கரோனா வைரஸ் வார்டினை  தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பார்வையிட்டார்.

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உள்ள சிறப்பு வார்டுக்கு லிப்ட் வசதி வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். அதனை நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ஒதுக்கப்பட்டு செய்து கொடுக்கப்படும் என கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.

அரசு பொதுமக்களுக்கு வழங்க உள்ள 1000 ரூபாய் நிவாரணம் என்பது போதாது. எனவே, இன்னும் அதிகமான தொகை வழங்க வேண்டும். அதைபோல் மீனவர்கள் விசயத்தில் அரசு கவனம் செலுத்த வேண்டும். தற்போது கரோனாவுக்கு எதிராக எல்லோரும் ஒன்றாக இணைந்து வேலை செய்யக்கூடிய நேரம். எனவே, அரசாங்கத்திற்கு நாம் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். அரசும் வரும்முன் காப்பதற்கான அனைத்து வசதிகளையும் செய்ய வேண்டும் என கனிமொழி எம்.பி. தெரிவித்தார். 

கரோனா இன்னும் அதிகமாக பரவக்கூடும் என்ற சூழ்நிலை வரும் என்றால் அரசு அதற்கான தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.