காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

நாகையில் 5 பேருக்கு கரோனா தொற்று உறுதி

புதுதில்லியில் நடைபெற்ற மத நிகழ்ச்சிக்குச் சென்று திரும்பிய நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த 5 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :3 ஏப்ரல் 2020, 2:59 pm

DIN

புதுதில்லியில் நடைபெற்ற மத நிகழ்ச்சிக்குச் சென்று திரும்பிய நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த 5 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுதில்லி நிஜாமுதீன் பகுதியில் நடைபெற்ற மத நிகழ்ச்சிக்குச் சென்று திரும்பிய பலருக்கு கரோனோ நோய்த் தொற்று இருப்பதாக கடந்த சில நாள்களுக்கு முன்பு கண்டறியப்பட்டது. இதையடுத்து, நாகை மாவட்டத்திலிருந்து புதுதில்லி மாநாட்டுக்குச் சென்று திரும்பியவர்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்தி, மருத்துவப் பரிசோதனைக்கு உள்படுத்தும் நடவடிக்கைகள் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. 

நாகை மாவட்டத்தில் நாகை மற்றும் மயிலாடுதுறை பகுதிகளிலிருந்து புதுதில்லிக்குச் சென்று திரும்பிய சுமார் 30-க்கும் அதிகமானோர் கடந்த 4 நாள்களாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.  இதில், நாகை மற்றும் மயிலாடுதுறையில் செவ்வாய்க்கிழமை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 15 பேரின் ரத்தம், சளி ஆகியன பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. 

இந்தப் பரிசோதனையின் முடிவில், நாகையைச் சேர்ந்த 3 பேருக்கும், நாகூர் மற்றும் பொரவாச்சேரியைச் சேர்ந்த தலா ஒருவருக்கும் கரோனா நோய்த் தொற்று இருப்பது  உறுதியாகியுள்ளது. இதையடுத்து, அவர்களின் வசிப்பிடங்கள் உள்ள பகுதிகளுக்கான உள்நுழைவு அனுமதி தடை செய்யப்பட்டது.

சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் தொடர்புடைய பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.